'' ஏராளமான உயிர்கள் பலியானால் ரஷ்யாதான் பொறுப்பு” - ரஷ்யாவை எதிர்க்கும் ஜோ பைடன்

joebiden RussiaUkraineConflict
By Irumporai Feb 24, 2022 04:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார், இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை போட்டு விட்டு வீடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும் என புதின் கூறியிருந்தார்.

தற்போது, உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அங்கு ரஷ்ய படைகளை அனுப்ப அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கி உள்ளன.

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் தாக்குதலை தொடங்கியுள்ளது ரஷ்ய படைகள். உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்க தொடங்கிய ரஷ்ய படைகள் , ரஷ்யாவின் ஓடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.

மேலும் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.