21 உயிர்களை பறித்த அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிரடி முடிவு எடுத்த அதிபர் ஜோ பைடன்!

Joe Biden
By Swetha Subash May 26, 2022 01:36 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் நேற்று தெரிவித்தார்.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 18 குழந்தைகள் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

21 உயிர்களை பறித்த அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிரடி முடிவு எடுத்த அதிபர் ஜோ பைடன்! | Joe Biden Condemns The Shoot At School Strict Laws

இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.

அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடுச் சட்டம் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.