‘’ ரஷ்ய விவகாரத்தில் இந்தியா பயப்படுகிறது ‘’ : ஜோ பைடன் கேள்வி
உக்ரைன் ரஷ்யா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது, போரை நிறுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா தாக்குதலை தொடர்கிறது . இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில, நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன் :
நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து உள்ளது ஆனால், குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது.அதே சமயம் ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ எனக் கூறினார்.