எலிசபெத் மகாராணி இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Joe Biden England
By Irumporai Sep 10, 2022 05:18 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் ராணி மரணம்

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார்.

எலிசபெத் மகாராணி இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் | Joe Biden Attends The Funeral Of Queen Elizabeth

ஜோபைடன் பங்கேற்பு

எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்னும் ஒருவாரத்தில் நடைபெறும் என கூறப்படும் நிலையில், ஜோ பைடன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.