இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்காவில் நீதிபதியாக நியமித்த ஜோ பைடன்!

usa joe biden indian descent
By Jon Mar 31, 2021 06:53 PM GMT
Report

 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய அமெரிக்கரான ரூபா ரங்கா புட்டகுந்தாவை கூட்டாட்சி நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆப்பிரிக்க - அமெரிக்க மற்றும் முஸ்லீம் அமெரிக்க வேட்பாளர்களை உள்ளடக்கிய உயர் நீதித்துறை பதவிகளுக்கான 10 வேறுபட்ட தேர்வுகளில் இவரின் தேர்வு அடங்கி இருக்கிறது.

ஜனாதிபதி தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்களில், 10 பேர் பெடரல் சர்க்யூட் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கும், ஒருவர் கொலம்பியா மாவட்டத்திற்கான உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிபதி புட்டகுந்தா, வாஷிங்டன் டி.சி மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாக இருப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்காவில் நீதிபதியாக நியமித்த ஜோ பைடன்! | Joe Biden Appoints Woman Indian Descent Judge Us

நீதிபதி புட்டகுந்தா தற்போது டி.சி. வாடகை வீட்டுவசதி ஆணையத்தின் நிர்வாக நீதிபதியாக பணியாற்றி வருகிறார். 2007ம் ஆண்டில் ஓஹியோ மாநில மோரிட்ஸ் சட்டக் கல்லூரியில் தனது ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு முதல் 2010 வரை டி.சி. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி வில்லியம் எம். ஜாக்சனுக்கும் சட்ட எழுத்தராக பணியாற்றினார்.

2010ம் ஆண்டு முதல் 2011 வரை டி.சி. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுக்கும் சட்ட எழுத்தராக தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். 2019ம் ஆண்டில் ஆணைக்குழுவில் சேருவதற்கு முன்பு, நீதிபதி புட்டகுந்தா 2013 முதல் 2019 வரை வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.