தோளில் கை போட்ட ஜோபைடன் .. சங்கடப்பட்டு நெளிந்த சிறுமி , சர்ச்சையாகும் வீடியோ

Joe Biden Viral Video
By Irumporai Oct 17, 2022 03:24 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சிறுமி ஒருவரின் தோளில் கைபோட்டு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் சிறுமிக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றை தந்துள்ளார், இந்த வீடியோ ஒருபக்கம் மிகுந்த பாராட்டையும், மறுபக்கம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டேட்டிங் அட்வைஸ்

அமெரிக்காவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஜோபைடன் பங்கேற்றார் அப்போது, நிகழ்ச்சியின் முடிவில்,சிறுமி ஒருவர் அதிபருடன் போட்டோ எடுக் சென்றுள்ளார் சிறுமியை கண்டதுமே, அதிபர் ஜோபைடன் அவரது தோளில் கைபோட்டு, சிறுமிக்கு வாழ்க்கையின் டேட்டிங் குறித்த ஆலோசனையை தந்துள்ளார்.

அதில் நான் என்னுடைய மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு என்ன சொன்னேன் தெரியுமா? என்று ஆரம்பித்து, 30 வயது வரும் வரை உண்மையான உறவில் ஆண்கள் வேண்டாம்.

சர்சையாகும் வீடியோ

30 வயது வரை டேட்டிங் கூடவே கூடாது. 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியஸாக நடந்து கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்... இதைக்கேட்டதுமே அந்த சிறுமி தர்மசங்கடமாக உணர்ந்துள்ளதாக தெரிகிறது

தோளில் கை போட்ட ஜோபைடன் .. சங்கடப்பட்டு நெளிந்த சிறுமி , சர்ச்சையாகும் வீடியோ | Joe Biden Advice To The Girl And No Serious

இதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.