அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன்? முதல்முறை மனம் திறந்த பைடன்!
அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் பேசியுள்ளார்.
ஜோ பைடன்
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனையடுத்து தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பைடன், "இளைய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன்.
நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழி.. இப்போது ஜனநாயகத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கவே அதிபர் ரேஸில் இருந்து விலகி இருக்கிறேன். நான் இந்த பதவியை மதிக்கிறேன், ஆனால் நான் என் நாட்டை அதைவிட அதிகம் நேசிக்கிறேன்.
விலகியது ஏன்?
உங்கள் அதிபராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய கவுரவம். ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது எனது பதவியை விட முக்கியமானது. மெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். இதற்காக எனது கட்சியை நான் ஒன்றிணைக்க வேண்டும் என்பது புரிந்தது.
அதிபராக நான் செய்த சாதனைகள், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எனது விஷன் ஆகியவை வைத்துப் பார்க்கும் போது நான் 2ஆவது முறையாக அதிபராகத் தகுதி பெற்றே இருக்கிறேன். ஆனால், ஜனநாயகத்தைக் காப்பது இதை எல்லாம் விட ரொம்பவே முக்கியமானது.
அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த இப்போது நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்க மக்களிடம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.