“ப்ப்பா..என்னா குளிருயா; மெத்தையின் மேல் போர்வையுடன் படுத்திருக்கும் மாடு” - இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு

trending rajasthan cow video cow on bed jodhpur
By Swetha Subash Dec 31, 2021 12:38 PM GMT
Report

வீடுகளில் குழந்தைகளைப் போல செல்லப்பிராணிகளான நாய் பூனைகளை பாவிக்கப்படுவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ராஜஸ்தானில் மூன்று மாடுகள் வீட்டுக் குழந்தைகளை போல பாவிக்கப்பட்டு அது செய்யும் சேட்டைகளும், செயல்களும் வீடியோக்களாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் அதன் உரிமையாளர்கள்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள குடும்பத்தினர் மாடுகளை அவர்கள் வீட்டு செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.

அந்த மாடுகள் பெட்ரூம்களில் ஒரு ஆளாக போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குவதும், ஜாலியாக வீட்டுக்குள் வலம் வருவதாகவும் உள்ளது.

அந்த குடும்பத்தினர் 'cowsblike’ என்ற இன்ஸ்டா பக்கத்தையும் நிர்வகித்து வருகின்றனர்.

அந்த பக்கத்தில் பதிவிடப்படும் வீடியோக்கள் செம வைரலாகியும் வருகின்றனர். அவர்கள் வீட்டில் கோபி, கங்கா, ப்ரிது என்ற மூன்று மாடுகள் உள்ளன.