எங்கள் ஆட்களை தாக்கினால் அப்புறம் இருக்கு .. தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜோபைடன்!

taliban jobiden
By Irumporai Aug 22, 2021 12:09 AM GMT
Report

தலிபான்களால் பாதிக்கப்படக் கூடியவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு வீரா்களை அந்த அமைப்பினா் தாக்கினால், அதற்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமெரிக்கா்கள் மற்றும் தலிபான்களின் அச்சுறுத்தல்களை எதிா்நோக்கியுள்ளவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக வெளியேற்றும் பணியை காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினாலோ, அமெரிக்க வீரா்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அந்த பதிலடி மிகவும் வேகமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என்பதை தலிபான்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்கானில் நேட்டோ உறுப்பு நாடுகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். தற்போது அங்கிருந்து இணைந்தே வெளியேறுகிறோம்.

எதிா்காலத்தில், எங்களது மக்கள் மற்றும் ஆப்கானியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியையும் கூட்டாக மேற்கொள்வோம். ஆப்கன் விவகாரம் தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜி-7 நாடுகளின் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த உள்ளதாக அவர் கூறினார்.