புதிய சிம் தேவையில்லை - 5ஜி சேவையினை தொடங்கிய ஜியோ
ஜியோ தனது 5ஜி சேவையை இந்தியாவின் நான்கு நகரங்களில் இன்று முதல் தொடங்குகின்றது.
5ஜி சேவை
டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்குவதாக ஜியோ கூறியிருந்தது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே முதலில் தொடங்கும் 5ஜி சேவை இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் தொடங்கி வைத்தார்
ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை 5ஜி . இந்த 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று இந்த 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது. டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, மும்பை ஆகிய நான்கு நகரங்களில் இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை தொடங்க இருக்கிறது என்று ஜியோ அறிவித்திருக்கிறது.
சிம் தேவையில்லை
இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நான்கு நகரங்களில் ஜியோவின் ட்ரு 5 ஜி பீட்டா சேவை ஒரு ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. 5ஜி சேவைகளை பெற புதிய சிம் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

இன்று குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே தொடங்கும் 5ஜி சேவை இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.