கமலா ஹாரிசின் கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிபரின் மனைவி : சர்ச்சையினை கிளப்பும் புகைப்படம்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவருக்கு அதிபரின் மனைவி ஜில் பைடன் உதட்டு முத்தம் கொடுத்தத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜோபைடன் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையின்போது, நாட்டை கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியபோதும் மற்றும் உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் படையெடுத்தபோதும், அமெரிக்காவின் பொருளாதாரம் ஆனது, பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது என குறிப்பிட்டார்.
அமெரிக்க வரலாறு என்பது வளர்ச்சி மற்றும் மீள்உருவாக்கத்திற்கான வரலாறு என அதிபர் பைடன் தனது உரையின்போது பேசினார்
முத்தம் கொடுத்த மனைவி
இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தனது உரையை தொடங்கும் முன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவருக்கு அதிபரின் மனைவியான டாக்டர் ஜில் பைடன் உதட்டு முத்தம் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்திய
து. அவரது இந்த செயலுக்கு சுற்றியிருந்த உறுப்பினர்கள் பலரும் பலத்த கைத்தட்டலை வழங்க இந்த சம்பவம் ட்விட்டர் வழியே வைரலானது. இதற்கு பலரும் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.