மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி - எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ஜீவா மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆசை ஆசையை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜீவா டிஷ்யூம், ராம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ. என்றென்றும் புன்னகை போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.
சமீபத்தில் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற இவர் கடந்தாண்டு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் அருள்நிதியுடன் “களத்தில் சந்திப்போம்” படத்தில் நடித்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் மீண்டும் ராஜசேகருடன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஜீவா முடிவு செய்துள்ளார். MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதால் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (படங்கள்) IBC Tamil

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan
