கடைசி டெஸ்ட் போட்டி - ஆஸி. வீரர் ஜை ரிச்சர்ட்சன் திடீர் விலகல்... - ஷாக்கான ரசிகர்கள்...!

Cricket Australia Cricket Team
By Nandhini Mar 06, 2023 07:26 AM GMT
Report

இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் கிரிக்க்ட போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜை ரிச்சர்ட்சன் திடீரென விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Ind vs Aus 3 ஒருநாள் போட்டி -

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.

jhye-richardson--abrupt-withdrawal

ஜை ரிச்சர்ட்சன் திடீர் விலகல்

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

இவரை ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது மும்பை அணி. இந்நிலையில், ஐபிஎல் தொடரிலும் ஜை ரிச்சர்ட்சன் பங்கேற்பதும் சந்தேகம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவருடைய ரசிகர்கள் பெரிதும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.