பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் : தோழியையும் வரவழைத்து நாசம் செய்த அதிர்ச்சி சம்பவம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரது தோழியையும் வரவழைத்து நாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் நேற்றிரவு பெண் ஒருவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றபோது அவருடன் வந்த மற்றொரு நபர் நடுவழியில், 5 நபர்களை போன் செய்து அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அத்தோடு அந்த பெண்ணின் தோழியையும் சம்பவ இடத்திற்கு வர சொல்லும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
தோழி அழைப்பதால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அந்த பெண்ணும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், 2-வது பெண்ணிடம் விசாரணை நடத்தி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய 6-வது நபரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.