1008 ரன்களை விளாசி உலக சாதனை படைத்த இந்திய உள்ளூர் அணி - ரசிகர்கள் அதிர்ச்சி

ranjitrophy2022 jharkhandVnagaland
By Petchi Avudaiappan Mar 17, 2022 10:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ரஞ்சிக் கோப்பையில் நாகலாந்து - ஜார்கண்ட் இடையேயான போட்டி ரசிகர்களை ரன் மழையில் நனைய வைத்துள்ளது. 

நடப்பாண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கியது. கடந்த வருடம் இந்த தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் பல தடைகளை கடந்து நடைபெற்றதால்  உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். 

எந்தளவு ஆர்வம் என்றாலும் நாகலாந்து - ஜார்கண்ட் இடையேயான போட்டி பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த மார்ச் 12 ஆம் தேதி உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் டாஸ் வென்ற நாகாலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. 

ஏற்கனவே ரஞ்சிக் கோப்பையில் ஜார்கண்ட் அணியை விட நாகாலாந்து சற்று பலம் குறைந்த அணி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. அதன்படி பேட் செய்த ஜார்கண்ட் அணியில் விராட் சிங் 107 (153), குஷாக்ரா 266 (270), சபாஸ் நதீம் 177 (304) ஆகியோர் நாகாலாந்து பந்து வீச்சை விளாச ஜார்கண்ட் தனது முதல் இன்னிங்சில் 880 ரன்களை குவித்தது. தொடர்ந்து பேட் செய்த நாகாலாந்து அணி 289 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 591 ரன்கள் ஜார்கண்ட் முன்னிலை பெற்றது. 

ஆனால் ரன்கள் போதவில்லை என மீண்டும் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து உட்கர்ஸ் சிங் 73, நஜிம் சிட்திக் 42, குமார் குஷாக்ரா 89, அங்குல் ராய் 153 என நாகாலாந்து அணியை விளாசி தள்ளினர். ஆனால் போட்டியின் 5 நாட்களும் முடிவடைந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்தது. 2வது இன்னிங்ஸில் ஜார்கண்ட்  அணி 417 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் அந்த அணி 1008 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.