80 மாணவிகளை சட்டை இல்லாமல் வீட்டிற்கு அனுப்பிய பள்ளி முதல்வர் - அதிர்ந்த பெற்றோர்
80 மாணவிகளின் சட்டையை கழற்றி வீட்டிற்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேனா தினம்
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை(10.02.2025) அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், பேனா தினம் கொண்டாடியுள்ளனர். இதில் தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் வாசகங்களை எழுதியுள்ளனர்.
80 மாணவிகள்
இதை பார்த்து ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் மாணவிகளை கண்டித்ததோடு, மாணவிகளின் சட்டையை கழற்றச் செய்துள்ளார். மேலும், சட்டை இல்லாமல் மேல் கோட்டுடன் 80 மாணவிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
மாணவிகள் சட்டை இல்லாமல் மேல் கோட்டுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பள்ளி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பேசிய துணை ஆணையர் மாதவி மிஸ்ரா, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, துணைப்பிரிவு நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி, துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.