ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு!

Jharkhand Mukti Morcha Jharkhand
By Sumathi Feb 20, 2023 11:24 AM GMT
Report

ஜார்க்கண்ட் 

2000ம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகர். இங்கு முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28% ஆகவும், பட்டியல் சமூக மக்கள் 12% ஆகவும் உள்ளனர்.

 பாபுலால் மராண்டி

இங்கு முதலாவது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் பாபுலால் மராண்டி என்பவர் பதவி வகித்தார். 1991-இல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். 1996 ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் சிபு சோரனிடம் 5,000 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-இல் பாரதிய ஜனதா கட்சியின் ஜார்கண்ட் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

1998 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தின் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை கைப்பற்றி சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கலங்கச் செய்தவர். பாபுலால் மராண்டி சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கட்டாயத்தின் பேரில், பாபுலால் மராண்டி 2003-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், அருச்சுன் முண்டா முதல்வரானார். 2006-இல் பாபுலால் மராண்டி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) எனும் மாநிலக் கட்சியை நிறுவினார்.

அருச்சுன் முண்டா

அவரைத் தொடர்ந்து, அருச்சுன் முண்டாவின் அரசியல் பிரவேசம் 1980களில் பீகாரின் தென்பகுதியில் அமைந்திருந்த மலைவாழ் மக்கள் மிகுந்த சார்க்கண்ட்டை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி நடந்த "சார்க்கண்ட் விடுதலைப் போராட்டத்தில்" நிகழ்ந்தது. அதன்பின், 1995ஆம் ஆண்டு பீகாரின் சட்டப்பேரவைக்கு கார்சுவான் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

2000ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடத் துவங்கினார். 2003ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவு அளித்த பாஜக அல்லாத உறுப்பினர்கள் மராண்டியின் நீக்கத்தைக் கோரியதால், கட்சித் தலைமை பழங்குடியினரிடம் செல்வாக்கு மிகுந்த அருச்சுன் முண்டாவை முதலமைச்சராக்க பரிந்துரைத்தது. 2003ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது அரசு பல சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவில் நிலையற்று இருந்தது. அதனால் 2006ல் அரசியல் காரணங்களுக்காக பதவி விலகினார்.

சிபு சோரன்

இதற்கிடையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரன் மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவர் மக்களவைக்கு 7 முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது, செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998 இல் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

2006 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் நிலக்கரிதுறை அமைச்சராக இருந்தார். இடையில் மாநிலம் 3 முறை குடியரசு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.

ரகுபர் தாசு

அதனைத் தொடர்ந்து, ரகுபர் தாசு சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் அறிவியல் துறை மாணவரான இவர் மாணவர் சங்க தலைவராக இருந்தார். செயபிரகாசு நாராயணன் தலைமையில் 1974இல் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அக்கல்லூரியிலேயே பின்பு சட்ட படிப்பு படித்தார். 1977இல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பாசக ஆரம்பித்த மூன்று ஆண்டுகள் கழித்து அதில் சேர்ந்தார். பாபுலால் மராண்டி அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை அருச்சுன் முண்டா அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

அப்போது நிதி, தொழில், நகர்ப்புறத் துறைகளுக்கான அமைச்சராக இருந்தார். இவர் சிபு சோரன் அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, , ராஞ்சி கழிவுநீர் திட்டத்தில் சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனமான மெய்ன்னார்டிற்கு சாதகமாக விளங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின், 2014ல் பாஜக பெரும்பான்மை பெற்றதையடுத்து முதல்வராக பதவியேற்றார். ஜார்க்கண்டின் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர் இவர்தான்.

ஹேமந்த் சோரன் 

அவருக்குப்பின் தற்போது 2019ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஹேமந்த் சோரன் முதலமைச்சராக உள்ளார். முன்னதாக 2013-2014 வரை பரியாஹாட் சட்டமன்றத் தொகுதியில் வென்று முதல்வர் பதவியில் இருந்தார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகனாவார். இந்தியாவில் மிக இளமையான முதலமைச்சர் இவரே.

கூட்டணியில் சலசலப்பு   

இந்நிலையில், ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிருப்தி எம்எல்ஏக்களால் குழப்பம் நிலவி வருகிறது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் தராமல் ஓரம்கட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 42 இடங்கள் தேவை. ஜேஎம்எம் கட்சியிடம் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 18 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

பாஜகவிடம் 26 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணியிடம் மொத்தமாக 30 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒருவேளை, ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி அதிருப்தி காரணமாக உடையும் பட்சத்தில், ஜேஎம்எம் கட்சிக்கு தனது எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்து பாஜக தனது கூட்டணி ஆட்சியை ஜார்கண்ட்டில் அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெல்லுமா பாஜக 

மேலும், சமீபத்தில், ஜார்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ரமேஷ் பயஸ், மராட்டிய மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழ்நாட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் (65) நியமிக்கப்பட்டார்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

இதற்கிடையில், ஜார்க்கண்ட் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் சிவப்பு தாழ்வாரமாக உள்ளது. டான்டோ பகுதியில் உள்ள காடுகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளது.பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து புரட்சிகர பகுதியாக மாற்றும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி - பலிக்குமா பாஜக கனவு! | Jharkhand Politics In Tamil

இந்த ஆயுதக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.