ஜார்க்கண்ட் கொடூர ரயில் விபத்து - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Accident Jharkhand Odisha Train Accident
By Vidhya Senthil Jul 30, 2024 04:37 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

ஜார்க்கண்ட்டில் அருகே ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம்

ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூரில் ஹவுரா-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சரைகேலா என்ற பகுதியில் ஏற்கனவே வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது.

ஜார்க்கண்ட் கொடூர ரயில் விபத்து - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு! | Jharkhand Passenger Train Accident Derails

இதனை தொடர்ந்து அதிகாலை 3:43 மணியளவில் அந்த வழியாக வந்த சக்ரதர்பூரில் ஹவுரா-மும்பை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் பக்கவாட்டில் மோதியதில் மோதி 14 பேட்டிகள் தரம் புரண்டனர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் ரயிலில் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகிறனர்.

ரயில் விபத்துக்கு மோடி அரசு தான் காரணம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ரயில் விபத்துக்கு மோடி அரசு தான் காரணம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

   ரயில் விபத்து

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அங்கு மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட் கொடூர ரயில் விபத்து - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு! | Jharkhand Passenger Train Accident Derails

முன்னதாக இந்த மாதத்தில் ஜூலை 18 அன்று , உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் திப்ருகர் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

இதே போல் சில நாட்களுக்குப் பிறகு, லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அம்ரோஹா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், டெல்லி-லக்னோ ரயில் பாதையில் இடையூறு ஏற்பட்டது. எனினும், உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.