விபத்தால் 4 ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த நபர் - கொரோனா தடுப்பூசி புண்ணியத்தால் எழுந்து நடந்த அதிசயம்

viral news jharkhand-man bed-ridden four years back
By Nandhini Jan 16, 2022 06:34 AM GMT
Report

ஜார்க்கண்டில் விபத்தால் 4 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த மனிதர், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது மூலம் எழுந்து நடந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், பெடார்வார் கிராமத்தை சேர்ந்தவர் துலர்சந்த் (44). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துலர்சந்த் ஒரு விபத்தில் சிக்கினார். அந்த விபத்தால் அவர் தனது குரலை இழந்தார்.

இதனையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் அவருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. தடுப்பூசி போட்ட அடுத்த நாள் துலர்சந்த் எழுந்து நடக்க தொடங்கி இருக்கிறார். மேலும், பேசவும் தொடங்கி இருக்கிறார்.இது அவரது குடும்பத்தினருக்கு ஆனந்த அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

பீட்டர்வார் சமூக சுகாதார மையத்தின் மருத்துவ பொறுப்பாளர் டாக்டர் ஆல்பல் கெர்கெட்டாவின் கூறுகையில், கடந்த 4ம் தேதியன்று துலர்சந்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது என்றார்.

துலர்சந்த் எழுந்து நடப்பது தொடர்பாக பொகாரோவின் சிவில் சர்ஜன் டாக்டர் ஜிதேந்திர குமார் கூறுகையில், இந்த சம்பவம் ஆச்சரியமாக உள்ளது. ஆனாலும், இது ஒன்றும் அதியம் கிடையாது.துலர்சந்தின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய மருத்துகுழு அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

துலர்சந்த் கூறுகையில், இந்த தடுப்பூசியை எடுத்ததில் மகிழ்ச்சி. ஜனவரி 4ம் தேதி தடுப்பூசி போட்டதிலிருந்து என் கால்களில் அசைவு இருக்கிறது. இழந்த குரலை பெற்றேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.