இனி மாதம் 2 முறை ரேஷனில் பொருட்கள் வாங்கலாம் - தீபாவளி பரிசும் காத்திருக்கிறது!
மாதம் இரண்டு முறை ரேஷன் வாங்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பரிசு
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசும் மத்திய அரசு குறைந்த விலையில் ஏழைகளுக்கு ரேஷன் வழங்குகின்றன.
அங்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், உப்பு, மசாலா பொருட்கள் போன்றவை இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் அரசு குறிப்பிட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் இரண்டு முறை ரேஷன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ரேஷன் கார்டுதாரர்கள் 2024 அக்டோபர் 16 முதல் 31 வரையில் ரேஷன் பெறுவார்கள்.
ரேஷன் பரிசு
இத்திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் அரிசி கிடைக்கிறது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு மாநிலங்களில்
பொதுமக்களுக்கு அரசு தரப்பில் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.