நடுரோட்டில் வாலிபரை ஹெல்மெட்டால் அடித்து வெளுத்து வாங்கிய பெண் - வைரல் வீடியோ..!
Viral Video
Jharkhand
By Nandhini
ஜார்கண்ட் மாநிலத்தில், நடுரோட்டில் ஒரு பெண் வாலிபர் ஒருவரை ஹெல்மெட்டால் அடித்து வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் வாலிபரை வெளுத்து வாங்கிய பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில், பைக்கில் வந்த 3 இளைஞர்கள் பெண்ணை மிரட்டியுள்ளனர். அப்போது, பெண் துணிச்சலாக அவர்களிடம் சண்டை போட, 2 இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அந்தப் பெண், நடுரோட்டில் சிக்கிய ஒரு வாலிபரை ஹெல்மெட்டால் அடித்து வெளுத்து வாங்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
