பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை.. எங்கே நடக்காது? முதல்வர் பேச்சால் சர்ச்சை!
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த முதல்வர் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின 14 வயது சிறுமி. இவர் நேற்றைய முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு வயல்வெளி அருகே இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

சிறுமி தூக்கில் தொங்கியிருப்பதை கண்ட அந்த பகுதிவாசிகள் உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
3 மாத கர்ப்பிணி
பிறகு இந்த சம்பவம் குறித்து அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அர்மன் அன்சாரி என்ற இளைஞர், சிறுமிக்கு திருமணம் ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனிடையே சிறுமி 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. அர்மன் அன்சாரியை கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஆனால் கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.
முதல்வர் பேச்சு
இதனால் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சிறுமியின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்கின்ற வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என தெரிவித்தார். மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன,
எங்கே நடக்காது? இவ்வாறு சம்பவங்களை கணிக்க முடியாது என்று தெரிவித்தார். முதல்வரின் இந்தப் பேச்சால் சர்ச்சை எழுந்து கண்டனங்கள் வலுத்துள்ளது.