நடிகை ஜான்வி கபூருடன் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ; வைரலாகும் புகைப்படம்
பிரபல பாலிவுட் நடிகையுடன் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது இந்தி திரையுலகை கலக்கி வருகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், அடுத்ததாக "Mr and Mrs Mahi" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் குறித்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஆனால் அதனுடன் சேர்ந்து வெளியான மற்ற புகைப்படங்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றன.
அதாவது ஜான்வி கபூரும் முன்னணி கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக்கும் அப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. விளையாட்டை மையாமாக கொண்டு உருவாக்கப்படும் "Mr and Mrs Mahi" படத்தில் ஜான்வி ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார்.
அவர் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பேட்டுடன் நிற்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன. அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுப்பதற்காக தான் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.