ஜெயலலிதா மரணத்தில் தற்போது வரை நீதி கேட்பது நான் மட்டும் தான்- ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக தொடங்கிவிட்டது. மூன்று மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பிறகும் மர்மமாம முறையில் உயிரழந்தார். அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையம் தன்னுடைய விசாரணையை முடிக்கவில்லை.
மேலும் அந்த ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா மரணத்தில் தற்போது வரை நான் மட்டும் தான் நீதி கேட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் ஆனவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.