கிறிஸ்துமஸ் பண்டிகையை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடிய ஜெயச்சந்திரன் குழுமம்!
தீவிரமான மாண்டோஸ் புயலையும் பொருட்படுத்தாமல், ஜெயச்சந்திரன் குழுமம் கொரியாவைச் சேர்ந்த கான்டாட்டா குழுவுடன் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக நடத்தினர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதே இந்த மகிழ்ச்சியான காலத்தைக் கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்று ஜெயச்சந்திரன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
மேலும், இறைவனால் பிரத்யேகமாகப் படைக்கப்பட்ட இந்த சிறப்புக் குழந்தைகள் மீது எங்களின் அளவுக்கடந்த அன்பு எப்போதுமே உண்டு.
மிக சிறப்பான நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை BKN ஆப்பர்சூனிட்டிஅறிவுசார் குறைபாடுடைய குழந்தைகள் பள்ளி, CSI மறுவாழ்வு பள்ளி மற்றும் CSI காதுகேளாதவர்களுக்கான பள்ளி ஆகியவற்றின் குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஜெயச்சந்திரன் குழுவின் இந்த சிறப்பு முயற்சி பார்வையாளர்களின் மகிழ்ச்சியையும், புன்னகையையும், அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த இதயத்துடன் மகிழ்ச்சியடையச் செய்ததாக மேலும் தெரிவித்தார்.
இந்த விழாவில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஏ. ஜான் லூயிஸ், ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.