ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு
நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
ரஜினி மகள் வீட்டில் கொள்ளை
நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் ஐஸ்வர்யா வீ்ட்டில் பணியாற்றிய ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நகைகளை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
நகைகள் மீட்பு
இதையடுத்து 100 சவரன் தங்கம், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, ரூ.1 கோடி வீட்டிற்கான ஆவணம் ஏற்கனவே மீட்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி இருந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் தேனாம்பேட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், தற்போது மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.