104 வயது மூதாட்டியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை
சென்னை பெரம்பூர் வாசுதேவன் தெருவைச் சேர்ந்தவர் ஞானாம்பாள், அவரின் வயது 104. கணவர் இறந்த நிலையில் முதல் மாடியில் தனியாக வசித்து வருகிறார். கீழ்த்தளத்தில் அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு அவருடைய பீரோவில் இருந்த 17 சவரன் நகை , 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சொத்து குறித்த ஆவணங்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மூதாட்டி அதிகாலை கண் விழித்து பார்த்ததில் கதவு திறந்து இருப்பதையும் பீரோவில் இருந்த நகை , பணம் , சொத்து ஆவணம் திருடு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மூதாட்டி ஞானம்பாள் கொடுத்த புகாரின் பேரில் திரு.வி.க நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.