நகை கடன் தள்ளுபடி விவகாரம் - பணத்தை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

Loan Discount Jewellery
By Thahir Sep 22, 2021 04:17 AM GMT
Report

ஒரே குடும்பத்தில் பலர் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நகை கடன் தள்ளுபடி விவகாரம் - பணத்தை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு | Jewellery Loan Discount

அதேசமயம் தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைகள் பற்றிய பெயர் ,கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் ,குடும்ப அட்டை எண் ,ஆதார் எண், முகவரி ,அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.

இதில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . குறிப்பாக 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன்பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகைகளின் பேரில் கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் 5 சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற நகை கடன்களை வசூலிக்க அனைத்து கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தவணை செலுத்த தவறி இருப்பின் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூலிக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நகை கடன் பெற்றிருந்தால் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது .

ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது