நகைக்கடன் தள்ளுபடி.. எத்தனை பேருக்கு கிடைக்கும்?” : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் என்ன?

ministerperiyasamy jeweleryloan dmkj
By Irumporai Mar 19, 2022 11:37 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியானது.

மேலும் அ.தி.மு.க கூட்டுறவு வங்கியில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன்கள் பெறுவதற்குத் தகுதியானவர்கள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்தது.

நகைக்கடன் தள்ளுபடி.. எத்தனை பேருக்கு கிடைக்கும்?” : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் என்ன? | Jewelery Loan Waiver Said Minister I Periyasamy

இந்நிலையில், மார்ச் 31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி, “மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன் நகை திருப்பித் தரப்படும். விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். முறைகேடாக நகை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.