ஓடும் ரயிலில் சின்னத்திரை நடிகைக்கு நடந்த கொடூரம் - பரபரப்பு சம்பவம்!
பெண் பயணிகளுக்கு ரயிலில் பாதுகாப்பு குறைந்து வருகிறது.
திருட்டு முயற்சி
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரேணுகா(30). தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டு, அங்கிருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, ரூ. 6 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை, தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு, அந்த ஹேண்ட்பேக்கை, தனக்கு பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தூங்கியுள்ளார். அப்போது ரயில் வாலாஜா ஸ்டேஷனில் நின்றபோது, ஒருவர் அவரது பக்கத்தில் அமர்ந்துக்கொண்டு, அந்த பேக்கை தூக்கிக்கொண்டு செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட ரேணுகா, ஹேண்ட் பேக்கை பிடுங்கி, ஓடும் ரயிலிலிருந்து வெளியே எறிந்துவிட்டார். பின் உடனே அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததில் ரயில் நின்றுள்ளது. பின், விரைவாக சென்று தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துள்ளார்.
நடிகை புகார்
இதனையடுத்து தகவலறிந்து விரைந்த ரயில்வே போலீஸார், தப்பமுயன்ற அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த நபரும், ஒரு போலீஸ்காரர்.
வாலாஜாவை சேர்ந்த வசந்தகுமார். ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வசந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.