அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த நகை மதிப்பீட்டாளர் - போலீஸ் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு
அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த நகை மதிப்பீட்டாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை நகர்மன்ற தேர்தல் 12-வது வார்டுக்கான வாக்கு பதிவு மையம் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திடீரென அரை நிர்வாணத்துடன் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகளும் போலீசாரும் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது அவருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது.
போலீசார் விசாரணையில் அரை நிர்வாணமாக வந்தவர் மகேஸபாபு என்றும், மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் எனவும் தெரியவந்தது.
நகை மதிப்பீட்டாளர்களுக்கு உரிய அங்கீகாரம், வேண்டும் என்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரி,அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்ததாக தெரிவித்தார்.
பின்பு அவரை எச்சரித்த அதிகாரிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் அனுமதித்தனர்.