ஜெர்ஸி மாடுகளாக பெண்கள்... விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய பால் நிறுவனம் - குவியும் கண்டனங்கள்

Women Advertising jersey-cow Dairy Company
By Nandhini Dec 19, 2021 05:14 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பெண்களை கொச்சைப்படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பால் நிறுவனம் ஒன்று உலக அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு தனிமனிதரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் சியோல் மில்க் (Seoul Milk). இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரம் தற்போது உலக அளவில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் திரும்ப பெற்றிருக்கிறது. மேலும், அந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக மனிப்பும் கோரியுள்ளது.

இதோ அந்த விளம்பர வீடியோ -


இந்த விளம்பரம் வெளியான சில நாட்களிலேயே கடும் சர்ச்சை கிளம்பியது. பலரும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், விளம்பரத்தை திரும்ப பெறுவதாக சியோல் மில்க் நிறுவனம் அறிவித்தது. இந்த விளம்பரத்திற்கு ஒவ்வொரு நபரிடமும் மன்னிப்பு கேட்கிறோம். இனியும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த பால் நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.