IPL மீடியா உரிமை யாருக்கு? நிகழும் கடும்போட்டி!

Cricket TATA IPL IPL 2022 Mukesh Dhirubhai Ambani
By Sumathi Jun 10, 2022 05:32 PM GMT
Report

ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்ற அம்பானி மற்றும் அமேசான் இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்ற டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி எண்டர்டெயின்மென்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய 10 கார்ப்ரேட் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

IPL மீடியா உரிமை யாருக்கு? நிகழும் கடும்போட்டி! | Jeff Bezos Vs Mukesh Ambani Set To Big Battle Ipl

அதில் அம்பானி மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் நிறுவனத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும்போட்டி

உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்த உரிமையைக் கைப்பற்ற களத்திலும் குதித்துள்ளன.

IPL மீடியா உரிமை யாருக்கு? நிகழும் கடும்போட்டி! | Jeff Bezos Vs Mukesh Ambani Set To Big Battle Ipl

இதுவரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி எண்டர்டெயின்மென்ட், கூகுள் மற்றும் ஆப்பிள், அமேசான், ரிலையன்ஸ் ஜியோ என 10 கம்பெனிகள் ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ளன.

இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் 29.50 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது.

எனினும் இந்த தொகையை செலுத்தி 10 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெறுவார்கள்.

இந்த முறை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஆசியா, டிஜிட்டல், டிஜிட்டல் அல்லாத, உலகம் என 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்துள்ளது.

10 நிறுவனங்கள் பங்கேற்றிருந்தாலும் இறுதிக் கட்டத்தில் அமேசான் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7.7 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஒப்பந்தம் செல்ல வாய்ப்பிருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்களும் கடும்போட்டி போடுவதாக கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் ஏற்கனவே கால்பந்து தொடர்களை ஒளிபரப்பும் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்போது கிரிக்கெட் ஒளிபரப்பிலும் களம் குதித்திருக்கிறது.

இதில் வெற்றி பெறுமா? என தெரியவில்லை. மூன்றாவதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் மீடியா உரிமையை விட்டுவிடக்கூடாது என்பதில் முடிவாக இருப்பதாகவும், அதற்கேற்ப காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.