விமானி இல்லாமல் விண்ணுக்கு சென்று பூமி திரும்பிய அமேசான் நிறுவனர்!!
உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ் குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியாக புளூ ஆர்ஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 11-ம் தேதி, பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்ணில் 90 கி.மீ. பயணித்தது.
ஜெப் பெசோஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டது.
விமானிகள் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீல விண்கலத்தில் ஜெப் பெசோஸுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி வாலி பங்க் மற்றும் ஆலிவர் டேமென் என்ற 18 வயது சிறுவன் உள்ளிட்டோர் பயணித்தனர்.
இவர்கள் சுமார் 7 நிமிடங்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பினர். மேற்கு டெக்ஸாஸில் உள்ள பாலைவனத்தில் அவர்களது ராக்கெட் தரையிறங்கியது.
Welcome back.https://t.co/VX9QqD70Zw #BlueOrigin pic.twitter.com/Usf02hq6ER
— ABC News (@ABC) July 20, 2021