முதலில் என்னிடம்.. பிறகு தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ... அட்ஜெஸ்ட்மேன் கேட்டது தமிழன்தான் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை

By Nandhini Jun 04, 2022 08:47 AM GMT
Report

சமீபகாலமாக சினிமாத்துறையில் மீடூ புகார்கள் தான் அதிகரித்து வருகிறது. தன் பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பெண்கள் பாலியல் தொந்தரவுகளை வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். சிலர் சமூகத்தில் வெளிப்படையாக கூறுகிறார்கள்.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ஜீவிதா பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

என்னை நடிக்க வைக்க ஒரு சினிமா பிரபலம் அழைத்தால். ஆனால், அதற்கு அவர் சில கண்டிஷன் போட்டார். நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். என்ன அட்ஜஸ்ட்மெண்ட்? என்று கேட்டேன். இல்லை.

நடிப்பில் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமா? வேறு ஏதேனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டுமா என்று விலாவாரியாக கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை.. இல்லை.. அட்ஜஸ்ட்மென்ட் என்றால் முதலில் நான் வருவேன், அடுத்த ஒளிப்பதிவாளர், அடுத்து இயக்குனர், அடுத்து தயாரிப்பாளர், அடுத்து ஹீரோ என வரிசையாக அடுக்கி கொண்டே போனார்.

இதைக் கேட்டு நான் அப்படியே ஷாக்காகி விட்டேன். இதற்கெல்லாம் ஒத்துக்கிட்டால் உனக்கு வாய்ப்பு தருகிறேன். இல்லையென்றால் அந்த வாய்ப்பு கிடையாது என்று கூறினார்.

இதையெல்லாம் கேட்டு நான் அப்படியே மிரண்டு போய்விட்டேன் என்றார். ஆனால், என்னிடம் அப்படியெல்லாம் பேசியது ஒரு தமிழன் தான். அவர் தமிழ் சினிமாவை சேர்ந்தவர் என்று நடிகை ஜீவிதா அந்தப் பேட்டியில் கூறினார்.   

முதலில் என்னிடம்.. பிறகு தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ... அட்ஜெஸ்ட்மேன் கேட்டது தமிழன்தான் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை | Jeevitha Actress