திரைப்படமாகும் சரவணபவன் ராஜகோபாலனுக்கு எதிரான ஜீவஜோதியின் சட்டப் போராட்டம்..!
சரவணபவன் ராஜகோபாலனுக்கு எதிராக 18 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உருவாக உள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகத்தையே ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கு உலுக்கியது. ஆட்களை வைத்து அவரை கொலை செய்ததாக சரவணபவன் ராஜகோபாலன் குற்றம் சாட்டப்பட்டார் .
உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபாலன், தண்டனையை அனுபவிக்காமலேயே உயிரிழந்தார். அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் 18 ஆண்டுகாலம் உறுதியோடு ஜீவஜோதி சட்டப்போராட்டம் நடத்தினார்.
இதனை பாலிவுட்டின் ஜங்கிள் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் படமாக்க உள்ளது.
விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.