JEE நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

india exam JEEMains2021 2021postpone
By Irumporai Apr 18, 2021 06:24 AM GMT
Report

ஏப்ரல் 27,28,30 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ (JEE )நுழைவுத்தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த தேர்வு ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைந்தவடைந்து உள்ளது.

அடுத்தகட்ட தேர்வு வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்து விவரங்கள் 15 நாட்களுக்கு முன்னர்  அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்த்துள்ளது.