காசு என்ன சார் காசு : தன் சொத்தின் பெரும் பங்கினை மக்களுக்கே அர்பணித்த பெரும் பணக்காரர்
உலகின் 4- வது பணக்காரரான ஜெப் பெசோஸ் தனது சொத்தின் பெரும் பகுதியை தொண்டு பணிகளுக்கு அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஜெப் பெசோஸ்
போர்ப்ஸ் அமைப்பின் தகவலின் படி உலக பணக்காரர்கள் வரிசையில் பல்லாயிரம் கோடி சொத்து மதிப்புகளுடன் 4 - வது இடத்தில் உள்ளார் ஜெப் பெசோஸ் , உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து கடந்த 2021 -ம் ஆண்டு விலகினார்.

இனி தொண்டு பணிதான்
இந்த நிலையில் 2020 ம் ஆண்டே தனது பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பு பற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, இயற்கை உலகை போற்றி பாதுகாக்கும் வகையில், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரத்து 370 கோடி நிதி வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
மனித குலத்திற்குதான் என்பணி
மேலும், தனது பெரும் பங்கு பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் பிரிவினைகளில் சிக்கிய மனிதகுலத்தின் ஒற்றுமைக்கான பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கும் சென்று சேரும் என கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது உண்மையில் கடினம் நிறைந்தது. அதற்கு இந்த நிதியை பயன்படுத்தும் வகையிலான திறன் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.