“அந்த நேரத்தில் எனக்கு அஷ்வின் தான் ஆறுதல் சொன்னார்” - மனம் திறந்த இளம் வீரர்

indian team jaydev unadkat ashwin ravichandran
By Swetha Subash Jan 30, 2022 07:15 AM GMT
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காதபோது அஸ்வின் மெசேஜ் செய்து ஆறுதல் கூறியதாக இளம் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

அப்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த தொடரில் அவர் நெட் பவுலராக சென்றிருந்தார்.

அப்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில் விராட் கோலி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களாக திடீரென விலகினர்.

இதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பலம் மிக்க ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அதில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையும் படைத்திருந்தது.

மேலும், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் நீண்ட காலமாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தனக்கு இடம் கிடைக்காதது குறித்து அப்போதே வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அப்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மெசேஜ் செய்து ஆறுதல் கூறியதாக உனட்கட் கூறியுள்ளார்.

அதில், 'ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் ரிசர்வ் பவுலர்களாக சென்றிருந்தவர்களுக்கு கூட விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அஷ்வின் பாய் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். "உனக்காக நான் வருத்தப்படுகிறேன். ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தாய்.

உன் விளையாட்டு மற்றும் மனநிலையில் தெளிவாக இரு. உனக்கான நேரம் வரும்" என அஸ்வின் கூறினார்' என்று உனட்கட் தெரிவித்திருக்கிறார்.