நடிகை ஜெயசுதாவுக்கு ரகசிய திருமணம் நடந்தது உண்மையா ? வெளியான உண்மை தகவல்;
தென்னிந்தியசினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயசுதா. இவர் கடந்த 1972-ம் ஆண்டு நடிக்க வந்துவிட்ட நிலையில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
திருமணம்
நடிகை ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இவர் இரண்டாவதாக நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா மூன்றாவதாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜெயசுதாவுக்கு தற்போது 64 வயது ஆகிறது. மேலும் ஜெயசுதா 64 வயதில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் வாரிசு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் ஜெயசுதா அந்த நபருடன் கலந்து கொண்டுள்ளார்.
விளக்கம் கொடுத்த நடிகை
இதனால் திருமணம் நடந்தது உண்மைதான் என்று செய்திகள் காட்டுத்தீ போல் பரவிய நிலையில் நடிகை ஜெயசுதா இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது அந்த நபர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இயக்குனர் என்றும் என்னை வைத்து ஆவணப்படம் எடுப்பதால் தான் என்னுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது என்னுடைய கேரியரில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றும் ஜெயசுதா கூறியுள்ளார்.