விரைவில் 2வது திருமணம்; பாடகியுடன் வந்த ஜெயம் ரவி - படுவைரலாகும் புகைப்படம்

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் பங்கேற்றுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் நடிப்பில் தற்போது பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இவருக்கு 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இவரது மகள் ப்ரீத்தாவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரவி மோகனும் கலந்துகொண்டார்.
வைரல் ஃபோட்டோ
அவருடன் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸும் சந்தனக் கலர் உடையை அணிந்துக் கொண்டு ஒரே சோபாவில் அமர்ந்திருந்தனர். மேலும் ரவி, கெனிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் இந்த கெனிஷா தான் என்று பேச்சு அடிபட்டது. பின்னர் தாங்கள் நண்பர்கள் என்று, விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.