குடும்பத்தை பிரித்தவள்; மாமியார் சித்ரவதை - மெளனம் கலைத்த ஆர்த்தி அம்மா

Tamil Cinema Divorce Aarti Ravi Ravi Mohan
By Sumathi May 17, 2025 11:36 AM GMT
Report

ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஜாதா அறிக்கை 

ஆர்த்தி ரவியின் அம்மாவும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்து 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். திரு சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக அந்தப் படத்தில் நடித்திருந்தார்.

குடும்பத்தை பிரித்தவள்; மாமியார் சித்ரவதை - மெளனம் கலைத்த ஆர்த்தி அம்மா | Jayam Ravi S Mil Sujatha Issues Statement

அந்த படம் எனக்கு வெற்றியை கொடுத்தது தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை திரு ஜெயம்ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்று யோசனையை வழங்கினார்.

அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க தொடங்கினேன். அடங்கமறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம்ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்திருந்தேன். இந்த படங்களுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன்.

எனது உயிர்நாடி கெனிஷாதான்; தெரபிஸ்ட்டாக உதவவில்லை - ரவி மோகன் கடைசி அறிக்கை

எனது உயிர்நாடி கெனிஷாதான்; தெரபிஸ்ட்டாக உதவவில்லை - ரவி மோகன் கடைசி அறிக்கை

தாங்கும் சக்தி இல்லை

அந்த பணத்தில் 25 சதவீதத்தை திரு ஜெயம் ரவி ஊதியமாக வழங்கி உள்ளேன் இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

குடும்பத்தை பிரித்தவள்; மாமியார் சித்ரவதை - மெளனம் கலைத்த ஆர்த்தி அம்மா | Jayam Ravi S Mil Sujatha Issues Statement

ஒரு பெண் என்ற நிலையை கடந்த ஒவ்வொரு படம் வெளியாகும் போது விடியற்காலை 5 மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் காட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.

மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல. திரு ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடி கணக்கான... இல்லை ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை.

இன்றுவரை என் பேரகுழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழ வெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும்.

அந்த துர்பாக்கியம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள் சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனைகளையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.