இனிமேல் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் - புது பெயர் இதுதான்

Jayam Ravi Tamil Actors
By Karthikraja Jan 13, 2025 12:53 PM GMT
Report

இனிமேல் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

ரவி மோகன்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் எடிட்டர் மோகனின் மகன் ஆவார். மேலும் இயக்குனர் மோகன் ராஜாவின் சகோதரர் ஆவார். இவர் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 

actor ravi mohan

தனது முதல் படமான ஜெயம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ரவி ஜெயம் ரவி எனவே அழைக்கப்பட்டார். இந்த படத்தை இவரது சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். 

இப்போ இந்த ஆசை வந்திருக்கு; ஏன்னு தெரியல - வெளிப்படையாக சொன்ன ஜெயம் ரவி

இப்போ இந்த ஆசை வந்திருக்கு; ஏன்னு தெரியல - வெளிப்படையாக சொன்ன ஜெயம் ரவி

தயாரிப்பு நிறுவனம்

இந்நிலையில் இனிமேல் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும், ரவி அல்லது ரவி ,மோகன் என அழைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

actor ravi mohan as jayam ravi

மேலும் அந்த அறிக்கையில், திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாகவும், உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலும், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து, எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக 'மாற்றப்படுகிறது என அறிவித்துள்ளார்.