ஜெயலலிதா மரணம் : மீண்டும் விசாரணை வளையத்தில் ஓ.பிஎஸ் ?
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி(நேற்று) ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது.மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி நேற்று ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.
அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகினார். அப்போது நடைபெற்ற விசாரணையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்று ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்,இன்றும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அவர் இன்றும் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க உள்ளார்.