ஜெயலலிதா மரணம் தொடர்பாக மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

J Jayalalithaa
By Irumporai Apr 12, 2023 12:46 PM GMT
Report

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைகளின் படி நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுள்ளது.

ஜெயலலிதா மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் தொடர்பாகவும், அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக விசாரணை நடத்தியது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மனு : சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி | Jayalalithaas Death Chennai High Court Dismissed

மனு தள்ளுபடி

விசாரணைக்கு பின் தனது அறிக்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. அவரது விசாரணையின் முடிவில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.