ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதா நிறைவேற்றம் !
ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பிற்பகல் கூடிய சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.