ஜெயலலிதாவின் சமையலர் காலமானார் - சசிகலா நேரில் அஞ்சலி..!

Cook ஜெயலலிதா உயிரிழப்பு J.Jayalalithaa PassesAway சமையலர்
By Thahir Mar 26, 2022 07:23 PM GMT
Report

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமையலராக இருந்து வந்த ராஜம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார் அவருக்கு வயது 75.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நீண்ட காலமாக சமையலராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜம்மாள் இன்று காலமானார்.

அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள சசிகலா, “ராஜம்மாள் அவர்களின் மறைவு மிகவும் வேதனையையும், துயரத்தையும் எனக்கு அளித்துள்ளது.

நம் அம்மா அவர்களின் வேதா இல்லத்தில் எங்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளார்.

ராஜம்மாள், அம்மா மீதும் என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அம்மா அவர்களுக்கும், எனக்கும் எத்தனையோ சோதனை காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்துள்ளார்.

ராஜம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.