பொன்னியின் செல்வனை படிக்க காரணமே ஜெயலலிதாதான் : ரஜினிகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ரஜினி பொன்னியின்செல்வன்
இதில் சிற்ப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினிகாந்த் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதா கூறியதன் காரணமாக பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டுவிட்டு படிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.
ஜெயலலிதாவால் படித்தேன்
ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார்.
அவர் கூறியதைக் கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்று கூறினார்.