ஜெயலலிதா உடன் இருப்பது நிர்மலா சீதாராமனா? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை என்ன?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் இருப்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. ஆனால் அது நிர்மலா சீதாராமன் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படம் ரவி வர்மா என்கிற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் தொடர்பான சர்ச்சை பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அது நிர்மலா சீதாராமன் இல்லை என்பதை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் ஜெயலலிதா உடன் இருப்பது பலம் பெரும் எழுத்தாளர் சிவசங்கரி என்பது தெரியவந்துள்ளது. இவர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகை பேட்டிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது தெரியவந்துள்ளது. எழுத்தாளர் சிவசங்கரி பல்வேறு இலக்கியம் தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். இந்திரா காந்தியி சுயசரிதையையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: India Today Fact Check