ஜெயலலிதா நினைவு இல்லம் சட்டவிரோதமானது: ஜெ.தீபா மனு மீது அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

court memorial aiadmk jayalalithaa
By Jon Mar 25, 2021 12:32 PM GMT
Report

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்ட்ன் இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றியது. இதற்கான அவசர சட்டத்தை கடந்த ஆண்டு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து போயஸ் கார்ட்ன் இல்லத்தை கைப்பற்றி அரசு நினைவு இல்லமாக மாற்றியது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஜெ.தீபக் தொடர்ந்திருந்த வழக்கோடு இணைத்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை சட்டப்பூர்வமான வாரிசாக அங்கீகரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை தங்களுடைய அனுமதி இல்லாமல் அரசு கையகப்படுத்தியுள்ளதாக வழக்கில் கூறியுள்ளனர்.